பைபாஸ் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் இரும்பு தடுப்புகள் மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தேனி: திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோட்டில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் பிரிவு பகுதியில் வைக்கப்பட்டள்ள இரும்பு தடுப்புகள் இருபுறமும் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

திண்டுக்கல்- குமுளி பைபாஸ் ரோடு தேனியை கடந்து செல்கிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள், கேரளா சுற்றுலா செல்வோர் இந்த ரோட்டில் அதிகம் பயணிக்கின்றனர். தற்போது தேனி காமராஜ் பஸ் நிறுத்த பகுதியில் பாலம் சீரமைப்பு பணி நடந்து வருதால் கம்பம், போடி, குமுளி செல்லும் பஸ்கள் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு, பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

தேனி நகர்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சென்று வருகின்றனர்.

வாகனங்கள் அல்லிநகரம் சந்திப்பில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இப் பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது.

விபத்தை தடுக்க ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து 50 அல்லது 100 மீட்டர் துாரத்தில் பேரிகார்டுகளை இரு புறமும் வைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

வாகன ஓட்டிகளும் பயமின்றி ரோட்டை கடக்க இயலும். போலீசார் இரும்பு தடுப்புகளை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement