மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
புதுச்சேரி: இ.சி.ஆரில் மயங்கி விழுந்த கூலித்தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 47. இவரது மனைவி கோகிலா, 39. இவர்களுக்கு சந்தோஷ் 21; பரத் 18; என இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன், சிவக்குமார் செட்டிக்குப்பத்தில் உள்ள அவரது தங்கை ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அங்கேயே தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கணபதி செட்டிக்குளம், இ.சி.ஆரில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் மயங்கி கிடந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement