எஸ்.பி.பி., சரண் இசை நிகழ்ச்சி ரத்து

காரைக்காலில் தொடர் கனமழையால் கார்னிவல் விழாவில், எஸ்.பி.பி., சரண் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

காரைக்காலில் கார்னிவல் விழா நடந்து வருகிறது. மினி மாரத்தான், பீச் வாலிபால், கால்பந்து போட்டி, படகு போட்டி, கபடி, மலர் காய் கண்காட்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனிடையே நேற்று காலை காரைக்காலில் சாரல் மழை பொய்தது. மாலை கனமழை பெய்தது. கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறும் உள்விளையாட்டு அரங்கில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இதனால் விளையாட்டு அரங்கம் மற்றும் கடற்கரை, காமராஜர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடப்பதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி., சரண் இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து இசை நிகழ்ச்சியை காண வந்த பொது மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement