அனுமதியின்றி பேனர் வைத்த அ.ம.மு.க.,வினர் மீது வழக்கு
புதுச்சேரி: இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்த அ.ம.மு.க., நிர்வாகிகள் 3 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில், நேற்று முன்தினம் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பங்கேற்றார். அவரை வரவேற்க, கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர் வைத்தனர்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்றினர்.
இந்நிலையில், இ.சி.ஆர்.,ல் உள்ள சிவாஜி சிலை முதல், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை வரை அனுமதியின்றி அ.ம.மு.க., பேனர்கள் வைத்த, அக்கட்சி நிர்வாகிகள் லாவண்யா, சேகர், முருகன் ஆகியோர் மீது, பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெய்ராஜ் டி.நகர்., போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளது குறிப் பிடத்தக்கது.