ஓட கூட முடியாதவர்கள் ; பாகிஸ்தான் போலீஸ் பணிக்கு வந்தனர்
கராச்சி: ஒரு கிலோ மீட்டர் கூட ஓட முடியாதவர்கள் பாகிஸ்தான் போலீஸ் பணிக்கு வந்தனர். தேர்வுக்கு வந்த பலர் மயக்கமுற்றனர்.
பாகிஸ்தான் ரயில்வே போலீஸ் படையினருக்கு புதிதாக 250 பேர் ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டது. 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 4 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். கூரில் இருந்து வந்தவர்கள் 3,500 பேர். ஆயிரத்து 200 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளதாக ரயில்வே டிஐஜி அப்துல்ராப் தெரிவித்தார்.
சிலர் மயக்கமுற்றனர்
அவர் மேலும் கூறியதாவது: பணி தேர்வுக்கு ஆண்கள் பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் பிஸிக்கல் தேர்வுக்கு தகுதியற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கூடி பலரால் ஓட முடியவில்லை. குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் பலரால் ஓட முடியாமல் தோல்வியுற்றனர். சிலர் மயக்கமுற்றனர். இவர்கள் பலர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வந்த மொத்த நபர்களில் 75 சதவீதம் பேர் 'அன்பிட் 'டாக இருந்தனர். 25 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். என்றார்.
சமூகவலை தளங்களில் கேலி
இவ்வாறு இளைஞர்கள் தோல்வி குறித்து பாகிஸ்தான் சமூகவலை தளங்களில் பலர் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். அடிப்படையில் இப்படி இருந்தால் இவர்களால் எப்படி நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் பதிவிட்டுள்ளனர்.