தமிழின் பெருமையை பரப்புவதில் மைல்கல்: கவர்னர் ரவி பெருமிதம்
சென்னை: தமிழின் பெருமையை பரப்புவதில் மைல்கல் என கவர்னர் ரவி தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும்.
இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
சம்பா - ,
19 ஜன,2025 - 12:13 Report Abuse
அத யாரும் பரப்ப தேவை இல்ல
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement