கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர், நடுக்கல்லூரில் 2024 நவம்பரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து மருத்துவக்கழிவுகளை லாரிகளில் கொண்டுவந்து கொட்டி எரித்தனர். பிறகு அனைத்து மருத்துவக் கழிவுகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மீண்டும் கேரள மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரி அதிபர் சுத்தமல்லி மாயாண்டி 42, மனோகர் 51, சேலம் லாரி டிரைவர் செல்லத்துரை, திருவனந்தபுரம் மருத்துவக்கழிவுகளை கையாளும் ஏஜென்ட் ஜித்தன் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி., சிலம்பரசன் பரிந்துரையில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி லாரி அதிபர் மாயாண்டி மீது குண்டச்சட்டத்தில் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement