இந்தியாவின் முதல் ஏர் டாக்சி மாதிரி ஷூன்யா அறிமுகம்

பெங்களூரு,:பெங்களூருவை தளமாகக் கொண்ட 'சர்ளா ஏவியேஷன்', இந்தியாவின் முதல் ஏர் டாக்சிக்கான முன்மாதிரியை வெளியிட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனமான சர்ளா ஏவியேஷன், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் 20 - 30 கி.மீ., வரையிலான குறுகிய பயணங்களுக்காக வடிவமைத்துள்ள, அதன் மாதிரி ஏர் டாக்சியான 'ஷூன்யா'வை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருகிற, 2028ம் ஆண்டுக்குள் இதன் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

ஆறு பயணியர் வரை இதில் பயணிக்க முடியும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தன் சேவையை மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தவும், இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தவும் சர்ளா ஏவியேஷன் திட்டமிட்டுள்ளது.

Advertisement