எண்கள் சொல்லும் செய்தி

ரூ.44,396 கோடி



இம்மாதம் 17ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் விற்றுள்ள இந்திய பங்குகளின் மதிப்பு இதுவாகும். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியான சரிவு, டாலர் மதிப்பு வலுவடைதல், புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்டவை அன்னிய முதலீட்டாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, பங்கு களை விற்று வருவதாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாதம் 2ம் தேதியை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

10,00,000 டன்



உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவில் இருந்து, உலக சந்தைக்கு 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அதிகாரபூர்வ உத்தரவை அரசு விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பருவத்தில் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல்முறையாக நடப்பாண்டில் நுகர்வு குறையும் என, எதிர்பார்க்கப்படுவதால் ஏற்றுமதியை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement