ஐ.டி., பொறியாளர் தற்கொலை; 4 வயது மகன் தாயுடன் இருக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

1

புதுடில்லி: தற்கொலை செய்து கொண்ட பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவின் பொறுப்பில் நான்கு வயது மகன் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் 34 வயதான மென்பொருள் பொறியாளரான அதுல் சுபாஷின் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சுபாஷ் தனது பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் அவரது சகோதரர் அனுராக் ஆகியோரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி விரிவான 24 பக்க தற்கொலைக் குறிப்பையும் வீடியோவில் தெரிவித்திருந்தார்.

சுபாஷின் தற்கொலை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் நீதி கோரியும் நிகிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்யக் கோரியும் குரல் கொடுத்தனர். பெங்களூரு போலீசார் பின்னர் நிகிதா, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரரை இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்தனர்.இருப்பினும் பின்னர் மூவருக்கும் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு சுப்ரீம் கோட்டிற்கு மேல் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


நான்கு வயது குழந்தையுடன் பேசியதில், குழந்தை தனது தாயார் நிகிதா சிங்கானியாவின் பொறுப்பில் இருக்கும் என்றும்,குழந்தையின் பாட்டி அஞ்சு தேவி, சிறுவன் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை நிகிதா மறைத்து வருவதாகக் கூறி, குழந்தையை பராமரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

அஞ்சு தேவி குழந்தைக்கு கிட்டத்தட்ட அந்நியர் என்றும், முடிந்தவரை பெற்றோரில் ஒருவரிடமே பராமரிப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாட்டி தனது பேரனைப் பார்க்க முடியும் என்றாலும், தாயுடன் சேர்ந்து பராமரிப்பது குழந்தையின் நலனுக்கு நல்லது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Advertisement