ஆசிய பாட்மின்டன்: இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: ஆசிய கலப்பு பாட்மின்டன் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சீனாவில், வரும் பிப். 11-16ல் ஆசிய கலப்பு அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 4வது சீசன் நடக்க உள்ளது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'டி' பிரிவில் தென் கொரியா, மக்காவ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு லக்சயா சென், பிரனாய், சதிஷ் குமார், இரட்டையர் பிரிவுக்கு சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, அர்ஜுன் தேர்வாகினர். பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கு சிந்து, மாளவிகா, ஆத்ய வரியாத், இரட்டையர் பிரிவுக்கு காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பொன்னப்பா, தனிஷா, திரீசா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அணி விவரம்: லக்சயா சென், பிரனாய், சதிஷ் குமார், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, அர்ஜுன், சிந்து, மாளவிகா பன்சோத், காயத்ரி கோபிசந்த், திரீசா, அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ, ஆத்ய வரியாத்.
கடந்த 2023ல் துபாயில் நடந்த இத்தொடரில் இந்திய அணி முதன்முறையாக வெண்கலம் வென்றது. இதுகுறித்து இந்திய பாட்மின்டன் சங்க செயலர் சஞ்சய் மிஷ்ரா கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெண்கலம் வென்றிருந்தோம். இம்முறை பைனலுக்கு தகுதி பெறுவது முதல் இலக்கு. அதன்பின் தங்கம் வெல்ல முயற்சிப்போம்,'' என்றார்.

Advertisement