பசுபதிபாளையம் எரிவாயு மயானத்தைபயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை



கரூர், :கரூர் அருகே, பசுபதிபாளையத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள, எரிவாயு மயானத்தை பயன்பாட்டுக்கு, கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதியான, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் கடந்த, 2007ல், தி.மு.க., ஆட்சியில், 50 லட்ச ரூபாய் செலவில், மாநகராட்சி சார்பில் நவீன எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் வரை செயல்பட்ட, எரிவாயு மயானம் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால், கரூர்-வாங்கல் சாலையில், கரூர் எரிவாயு மயான அறக்கட்டளை சார்பில், செயல்படும் எரிவாயு மயானம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த எரிவாயு மயானமும் பராமரிப்பு காரணமாக, அவ்வப்போது மூடப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் உடல்களை, தகனம் செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால், கரூர் அருகே பசுபதிபாளையத்தில், பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான, எரிவாயு மயானத்தை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற, கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

Advertisement