மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


கரூர்,: வேலாயுதம்பாளையம் அருகே, மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், புன்னம் ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 53; இவர், வேலாயுதம்பாளையம் அருகே, காகிதபுரம் பகுதியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 21ல் தோட்டத்தில் மரத்தில் ஏறி, கிளை வெட்டும் பணியில் பெருமாள் ஈடுபட்டிந்தார். அப்போது, தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்ட பெருமாள், கரூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement