புதிய ஆர்.ஓ., முன்னிலையில்தேர்தல் பணி குறித்து ஆலோசனை


புதிய ஆர்.ஓ., முன்னிலையில்தேர்தல் பணி குறித்து ஆலோசனை



ஈரோடு, :ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் (ஆர்.ஓ.,) ஸ்ரீகாந்த் நேற்று பொறுப்பேற்ற நிலையில், தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தேர்தல் மண்டல அலுவலர் பிரேமலதா, பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து அலுவலர்களின் பணிகளை அறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர், வரும் நாட்களில் குறைபாடுகள் இன்றி தேர்தல் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து, உடனே பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவுக்கு தெரிவித்து நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு செல்வது, அவற்றின் அச்சிடப்பட்ட 'பேலட் ஷீட்'களை ஒட்டுவது, இன்று முதல் தபால் ஓட்டுப்பதிவை உறுதி செய்வது போன்றவற்றை கண்காணிக்க வேண்டும் என, யோசனை தெரிவித்தார். மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement