உழவர்சந்தை ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை: மதுரை மாநகராட்சி 16வது வார்டு பீபிகுளம் உழவர்சந்தை முதல் கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்பு வரை உள்ள ரோட்டில் இருபுறமும் இருந்த 20 ஆண்டுகால ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் மணியன், ஏ.டி.பி.ஓ., சரோஜா முன்னிலையில் 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள், நடைபாதை கடைகள் வியாபாரிகள் எதிர்ப்புகளுக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

Advertisement