வளர்ச்சி மையம் துவக்க விழா

மதுரை: மதுரையில் தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி மற்றும் தமிழக ஸ்டார்ட்அப் இணைந்து டி.எஸ்.எம்., தொழில்முனைவோர்களுக்கான வளர்ச்சி மையம் தொடக்கவிழா நடந்தது.

தலைவர் பங்கேரா தொடங்கி வைத்து பேசுகையில், ''தொழில் முனைவோருக்கான எதிர்கால திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தொழில் தொடங்குவது பற்றி மாணவர்கள் அறிய முடியும். புதுமையான சிந்தனையுடைய நபர்கள் தொழில் நிறுவனங்கள் உருவாக்க உதவும்'' என்றார்.

கல்லுாரி இயக்குனர் முரளி சாம்பசிவன், முதல்வர் செல்வலட்சுமி, நிர்வாக தலைவர் மஞ்சுளா, பேராசிரியர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.

Advertisement