பள்ளியில் திருக்குறள் போட்டி

தேனி: மதுரை காமராஜ் பல்கலை திருக்குறள் இருக்கையின் சார்பில் ஜி. கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் போட்டிகள் நடந்தது.

வி.ஜி.பி., உலக தமிழ் சங்க தலைவர் சந்தோசம் தலைமை வகித்தார். பல்கலை தமிழ்துறைத்தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் அந்தோணி பால்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், தோல்பாவை கூத்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. தியாகி அழகன் பெருமாளுக்கு விருது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement