நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன.,24 காலை 10:00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ளவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, நர்சிங், தையல் பயிற்சி பெற்றவர்கள் சுயவிபர குறிப்புடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 79047 06709 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Advertisement