குடியிருப்பை சூழ்ந்த தண்ணீர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி பெரிய கண்மாய்களில் நிலையூர் பெரிய கண்மாயும் ஒன்று. வைகை அணை தண்ணீர் மூலம் இக்கண்மாய் நிரம்பும். ஐந்து ஆண்டுகளாக இக்கண்மாய் மறுகால் பாய்கிறது. மறுகால் தண்ணீர் கால்வாய் வழியாக சொக்கனாம்பட்டி, கப்பலுார் விடத்தக்குளம், கொக்குளம் உள்பட பல்வேறு கண்மாய்கள், விளை நிலங்களுக்கு செல்லும்.

அந்த சின்ன கலுங்கு மறுகால் வாய்க்கால் துார்வாரப்படாததால் தண்ணீர் வெளியேறி அரசு நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கிறது. இதனால் சொக்கனாம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.

மறுகால் வாய்க்காலை துார்வார வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த வடிவேலன் தெரிவித்தார்.

Advertisement