கிடா முட்டு போட்டி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கிடாமுட்டுவோர் சங்கம் செயலாளர் கணேசன், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

உசிலம்பட்டி அருகே சீமானுாத்துவில் ஆண்டுதோறும் கோயில் திருவிழாவையொட்டி கிடாமுட்டு போட்டி நடைபெறும். பிப்.2 ல் போட்டி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி கலெக்டர், எஸ்.பி., உசிலம்பட்டி போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement