போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

வாடிப்பட்டி: சமயநல்லுார் டி.எஸ்.பி.,அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

டி.எஸ்.பி.,ஆனந்த்ராஜ் தலைமை வகித்தார்.

சட்டம் ஒழுங்கு, மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் சமூக வளர்ச்சி மேம்பாடு திட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் டேபிள், பீரோ, பேரிகாட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்ஸ்பெக்டர்கள் சரவணன், முருகானந்தம், எஸ்.ஐ.,க்கள் முருகேசன், சிவக்குமார், ராஜா, முத்துபாண்டி, உதயகுமார், முகமதுரபீக், நிறுவனத்தின் மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாச ஆஞ்சநேய ரெட்டி, துணை பொதுமேலாளர் ஜான் பீட்டர், ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், வினித் பங்கேற்றனர்

Advertisement