பள்ளி ஆண்டு விழா
மதுரை: மதுரை துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா பள்ளி அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் நடந்தது. ஆசிரியர் வேதமுத்து வரவேற்றார்.
யுனிவேர்ல்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனர் பிரேம்குமார் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அவர் பேசுகையில், ''போட்டிகள் நிறைந்த உலகில் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்து, பன்முகத் திறமைகளை வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாகத் திகழ வேண்டியது அவசியம்.
பெற்றோருக்கும், பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம், நற்பண்புகளுடன்வாழ்ந்தால் வெற்றி வசமாகும்'' என்றார்.
பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 7 தங்கம், 28 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட பரிசு வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சூசைராஜன் நன்றி கூறினார். எம்.எல்.ஏ., பூமிநாதன், கவுன்சிலர் விஜயலட்சுமி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர். தாளாளர் குழந்தைராஜ், தலைமையாசிரியர் ஸ்டீபன் லுார்து பிரகாசம் ஏற்பாடுகளை செய்தனர். பாதிரியார் மார்ட்டின் ஜார்ஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.