ஜல்லிக்கட்டு விரோதத்தில் ஒருவர் கொலை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பி.அழகாபுரியில், ஜல்லிக்கட்டு முன்விரோதத்தால், இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பி.அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சசி, 25. இவர் வெளிநாட்டிலிருந்து ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவருக்கும் சிவகங்கை மாவட்டம் இளையத்தான்குடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல், 25, என்பவருக்கும் அப்பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சசியை கொலை செய்த வெற்றிவேல், திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைத்தார்.

Advertisement