ஆனங்கூர் சாலையில் ஆபத்து காத்திருக்கு


ஆனங்கூர் சாலையில் ஆபத்து காத்திருக்கு


திருச்செங்கோடு,: திருச்செங்கோடு நகராட்சி, ஆனங்கூர் சாலையில், எம்.எல்.ஏ., அலுவலகம், சினிமா தியேட்டர், மருத்துவமனை, வணிக வளாகம் என, பொதுமக்கள் நடமாட்டம் எந்நேரமும் அதிகளவில் காணப்படும்.
ஈரோட்டில் இருந்து, திருச்செங்கோடு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், ஆனங்கூர் சாலை ஒரு வழிப்பாதை வழியாகத்தான் நகருக்குள் வர வேண்டும். ஆனால், இந்த சாலையின் அகலம் மிகவும் குறைவாக உள்ளது.
சாலையின் ஒரு பகுதியில், அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி தியேட்டர் அருகே, கழிவுநீர் செல்லும் சாக்கடையின் மேல் பகுதியில் சிலாப் கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த சிலாப் கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு வழிப்பாதை என்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. கனரக வானங்களுக்கு வழிவிட, சாலையோரம் ஒதுங்கி நிற்கும்போது சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சிலாப் கற்களை மாற்றியமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement