இறகுப்பந்தில் சாதித்த பள்ளி மாணவர்

திண்டுக்கல்: அகில இந்திய இறகுப்பந்து போட்டி மும்பையில் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழநி தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சிபி ஜெரோ 11 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்றார்.

28 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இதில் திண்டுக்கல் மாணவன் சிபி ஜெரோ முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அவரை திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வாழ்த்தி பரிசு வழங்கினார். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், துணை த்தலைவர் ரமேஷ் பட்டேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, புனித லுார்தன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லுார்து மரிய பிரிஜிட் பங்கேற்றனர்.

Advertisement