பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன், 32; இவர், தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை, வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினரும் வெளியில் சென்று விட்டனர். மதியம், 2:00 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு, 6 பவுன் நகை, 10,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement