நாளை வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுபவர்களுக்கு அழைப்பு
நாளை வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுபவர்களுக்கு அழைப்பு
நாமக்கல், : 'மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும்,- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்', நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும், இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
வேலையளிப்போரும், வேலைதேடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 04286--222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.