திருவள்ளூர்: புகார் பெட்டி; ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள குமரன் நகர் சாலை
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள குமரன் நகர் சாலை
கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ளது குமரன் நகர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள கிராம சாலைய குடியிருப்புவாசிகள் சிலர் பல இடங்களில் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இதனால் சாலை குறுகலாக மாறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த விஷப்பூச்சிகளால் ஒரு பகுதிவாசி மற்றும் இரு நாய்கள் இறந்துள்ளன.
இதையடுத்து பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைக்கவும் விஷப்பூச்சிகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமரன் நகர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வி.வாசு,
வெங்கத்துார்.