அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கு


அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கு


நாமக்கல், : நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி கலையரங்கில், பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.
தைவான் நாட்டை சேர்ந்த, 'நேஷனல் தைவான் ஓசோன்' பல்கலை பேராசிரியர் ஜியாங் சூ ஹ்வாங், கடல் ஆராய்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், இலங்கை ருஹானா பல்கலை பேராசிரியர் குருஜி, இன்றைய நீர் நிலைகளின் ஆராய்ச்சி, முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
இந்த கருத்தரங்கில், தமிழக பல்கலை மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களின் பல்கலைகளை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ராஜசேகரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியின், விலங்கியல் துறை தலைவர் ஷர்மிளாபானு செய்திருந்தார்.

Advertisement