குடிநீர் வால்வு தொட்டி சேதம்

சோழவந்தான்: குருவித்துறை பகுதி சோழவந்தான் மெயின் ரோட்டில் தாமோதரன்பட்டி பிரிவு அருகே ரோட்டோரம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் ஏர் வால்வு தொட்டி உள்ளது. பல மாதங்களுக்கு முன் இந்த கான்கிரீட் தொட்டியின் சிலாப், ரோட்டோர பக்கமுள்ள அடைப்புச் சுவர் சேதமடைய துவங்கியது.

உரிய பராமரிப்பு பணிகள் செய்யாததால் தொட்டியின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.

இதனால் தொட்டியில் தேங்கியுள்ள குடிநீர் நுரை பொங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது. ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தொட்டியை பராமரிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement