சாலை பாதுகாப்பு விழா

மதுரை: சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மேலுார் பஸ்ஸ்டாண்ட் அருகே பொதுமக்கள், பயணிகள், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் முத்துராம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தும், சாலை விதிகள் குறித்தும் பேசினர்.

Advertisement