மாணவர்களுக்கு வளாக தேர்வு

மதுரை: மதுரை கே.எல்.நாகசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை இனால்பா கேப்ரியல் சன் ரூப் சிஸ்டம்ஸ் சார்பில் 2025 பேட்ச் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் தேர்வு நடந்தது.

நிறுவன அதிகாரி அலெக்சாண்டர் 42 மாணவர்களை தேர்வு செய்தார். நிகழ்ச்சிக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் அனந்தன் வரவேற்றார். துணை முதல்வர் சகாதேவன், ஆசிரியர்கள் சின்னத்தம்பி, ஞானமுத்து ஏற்பாடு செய்தனர்.

Advertisement