கூட்டுறவு பயிற்சி துவக்க விழா
சின்னாளபட்டி: இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம், காந்திகிராம பல்கலை கூட்டுறவுத்துறை சார்பில் பொறுப்பான நிர்வாகம் நிலைத்தன்மை , இணக்கம் குறித்த பயிற்சி முகாம் துவக்க விழா காந்திகிராமத்தில் நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றிய முதன்மை செயல் அலுவலர் சுதிர் மகாஜன்,பல்கலை கூட்டுறவுத் துறை தலைவர் தமிழ்மணி, கூட்டுறவு ஒன்றிய ஆலோசகர் சாகர்வாட்கர் பேசினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சை வரவேற்றார்
கல்விசார் ஒத்துழைப்புக்காக காந்திகிராம பல்கலை இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement