கொசவபட்டியில் ரூ.1.2 கோடியில் தார் சாலை
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் தினமலர் செய்தி எதிரொலியாக- ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்க பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் இருந்து நத்தமாடிப்பட்டி வரை செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ரோடு பள்ளம் மேடாகி ஜல்லிகற்கள் பெயர்ந்து மண் சாலை போல் உள்ளது. இதனால் பள்ளி ,கல்லுாரி மாணவர்கள்,மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் முயற்சியால் கொசவபட்டியில் இருந்து நத்தமாடிப்பட்டி வரை புதிய தார் சாலை , புதிய பாலங்கள் அமைக்க ரூ.1 கோடியே 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராமதாஸ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் பாப்பாத்தி, ஒன்றிய பொருளாளர் ஜான் பீட்டர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆண்டிச்சாமி கலந்து கொண்டனர்.