கொடைக்கானலில் சாரலுடன் பனிமூட்டம் கணிக்க முடியாத வானிலையால் பாதிப்பு

கொடைக்கானல்: - கொடைக்கானலில் நேற்று சாரல் மழையுடன் அடர் பனிமூட்டம் நிலவியது. இம்மலைப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தொடர் சாரல் மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இரு தினங்கள் வெயில் பளிச்சிட்டு இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று காலை தெளிவான வானிலை இருந்த நிலையில் மதியத்திற்கு பின் நகரை பனிமூட்டம் சூழ்ந்து சாரல் மழை பெய்தது.

எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலை வரை இந்நிலை நீடித்தது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் வானிலையை கணிக்க முடியாத சுற்றுலா நகரில் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது.

Advertisement