பேட்ஸ் மேன், விக்கெட் கீப்பர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த 13 முதல் 21 வயதுடைய பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் தேர்வு நடக்க உள்ளதால், அதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.' என, தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லக்ஷ்மண நாராயணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. பயிற்சியில் சேர தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பேட்ஸ் மேன்கள், விக்கெட் கீப்பர்கள் தங்களது பெயரை ஜன.22 முதல் இணைச் செயலாளர், தேனி மாவட்டகிரிக்கெட் சங்கம், ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ், மதுரை ரோடு, தேனி, மேனகாமில் யூனிட் 2, கம்பம் ரோடு, தேனி என்ற 2 முகவரிகளில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று, ரேஷன் கார்டு நகலுடன் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.திண்டுக்கல், கரூர், தேனி மாவட்டங்களுக்கு தேர்வு நடக்கும்.
இத்தேர்வானது பிப்.2ல் திண்டுக்கல் பழைய கரூர் ரோடு எம்.வி.எம்., நகர் 6வது குறுக்குத் தெருவில் உள்ள வலைப் பயிற்சி மைதானத்தில் காலை 8:00 மணி முதல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் கூடுதல் விபரங்கள் பெற 98421 13434 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.