மழை பாதிப்பு வயல்களில் சப்-- கலெக்டர் ஆய்வு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி நேற்று ஆய்வு செய்தார்.

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கடலுார் மாவட்டத்தில் நெற்பயிர் உட்பட விவசாய பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தது. அரசு சார்பில், பாதிக்கப்பட்ட நிலங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், விண்ணப்பித்த நிலங்களில் பயிர்கள் பாதிப்பு குறித்து ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சத்திரம் சுற்று பகுதிகளான வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி நேற்று ஆய்வு செய்தார்.

இதில், பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் நந்தினி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர் வசந்தி, உதவி வேளாண் அலுவலர்கள் மணிவாசகம், பிரபு விவசாய சங்க கோதண்டராமன், ரெங்கநாதன், , அண்ணாமலை, குமார், சூரியமூர்த்தி, முத்துக்கிருஷ்ணன், வேணுகோபால், பூவராகன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement