சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: வேங்கைவயல் வழக்கில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

16

சென்னை: '' வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.


@1brபுதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார். முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மனிதக்கழிவை கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



திருமாவளவன்






இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதாவது: சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. விசாரணையை தமிழக அரசே சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக்கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தோன்றுகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் உத்தவிடுமோ என்ற ஐயத்தில் சி.பி.சிஐ.டி., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement