தேர்தலை சந்திக்க கனிமவளக் கொள்ளை கும்பலை நம்பும் தி.மு.க.,: அண்ணாமலை தாக்கு
சென்னை: '' 2026 சட்டசபைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்து பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ள தி.மு.க., கனிமவளக் கொள்ளைக் கும்பலின் வசூலைத் தான் நம்பி இருக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், ஆளும்கட்சி ஆசி பெற்ற புதுக்கோட்டை 'கேங்க்' வசூல்வேட்டை நடத்தும் நிலையில், கரூர் 'டீம்' மீண்டும் களமிறங்கி உள்ளதால் கனிம வள தொழிலே ஆட்டம் கண்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.(https://www.dinamalar.com/news/premium-news/steal-minerals-run-a-separate-empire-the-atrocities-of-the-pudukkottai-and-karur-gangs-are-at-their-peak-/3837837)
இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே. கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது.
கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன் கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது இந்த பேரழிவு மாடல் திமுக அரசு.
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கிறது திமுக. தமிழகம் முழுவதும் மலைகளை மணலைத் திருடி, கனிம வளங்களைச் உடைத்து, சுரண்டி, எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பருவமழை வருவதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க முடிவு செய்திருக்கும் திமுக, அதற்காக, பொதுமக்களையும், கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி. கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது, கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது.
வரும் 2026ம் ஆண்டு, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த பேரழிவு மாடல் திமுக ஆட்சியின் கனிமவளக் கொள்ளையர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் திமுக.,வினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கனிமவளக் கொள்ளை மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனைச் சொத்துகளும் மீட்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (11)
Mediagoons - ,இந்தியா
24 ஜன,2025 - 22:54 Report Abuse
அனைத்து வகை கொள்ளையர்களான கார்போரேட்டுகளை நம்பியுள்ள பாஜகவுக்கு இது எவ்வளவோ மேல்
0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
24 ஜன,2025 - 21:44 Report Abuse
தேர்தலை சந்திக்க கார்ப்ரேட் நிறுவனங்களை நம்பிய பாஜக.,வை போலவா
0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
24 ஜன,2025 - 20:56 Report Abuse
அப்போ பொய் ஜே பி எதை நம்பி டெல்லி அரசியலில் இறங்கியுள்ளது அண்ணாமலை ?
1. ரௌடிகளையும் கொலைகாரர்களை கொள்ளைக்காரர்களும் நம்பியா ?
2. அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களை நம்பியா ?
3. வருமான வரி துறை, ஈ . டி , ரைடுகளை நம்பியா ?
4. எதிக்கட்சிகளை மற்றும் ஊடகத்துறைகாலை பணம் கொடுத்து, அல்லது காலை வாரி பின்புறமாக வாசல் வழி நுழையும் முறையா ?
எதையும் விபரமாக பேசுங்கள் அண்ணாமலை
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
24 ஜன,2025 - 19:54 Report Abuse
பாஜக வுடன் கூட்டணி வெச்சா கிடைக்கிற ஓட்டு கூட கிடைக்காது ன்னு ஒவ்வொரு கட்சியும் பயப்படற அளவுக்கு பாஜக வெறுப்பு அரசியல் பண்றாங்க. மதவாதம், கலவரம் தான் அவங்க அஜண்டா. இப்போ கோமியம் வேற சேர்த்துக்கிட்டாங்க. என்னத்த சொல்ல.
0
0
Reply
Bala - chennai,இந்தியா
24 ஜன,2025 - 19:32 Report Abuse
2026 இல் தலைவா உங்களைநம்பித்தான் தமிழகமே இருக்கு. எப்படியாவது மெகா கூட்டணி அமைத்து காட்டாட்சி கனிமவள கொள்ளையர்கள் ஆட்சியை திருட்டு திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்க தலைவா . உங்களுக்கு புண்ணியமா போகும். வீட்டுக்கு அனுப்பிய பிறகு அத்தனை கொள்ளையர்களும் கம்பி எண்ணுவதை தமிழக மக்கள் பார்க்கவேண்டும்.
0
0
Reply
Ray - ,இந்தியா
24 ஜன,2025 - 19:10 Report Abuse
இவர் நம்பிக்கையில்தான் மதுரைக்காரங்க வேட்டு வச்சு பெரிய பாறாங்கல்லை போட்டுட்டாங்க
0
0
Reply
ram - ,
24 ஜன,2025 - 19:09 Report Abuse
கருப்பு பணத்த மீட்டுட்டீங்களா மீட்டு உங்க பொண்டாட்டிக்கு நகை வாங்கி போட்டீங்களா. எங்களுக்கு வங்கி கணக்குல ஒரு 100 ரூபாய் போடகூடாதா.
0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
24 ஜன,2025 - 19:03 Report Abuse
கொஞ்ச நாளா மணல் / கல் குவாரி பற்றி பேச்சே காணோமே , உமக்கும் கரெக்ட் ஆஹ் மாமூல் கொடுக்கிறார்கள் ஆகவே தான் இப்போ பேச்சே காணோம் , கனிமவள மாமூலுக்கு குறி வெச்சிட்ட போல இருக்கு ENJOY
0
0
Reply
கந்தண் - ,
24 ஜன,2025 - 18:20 Report Abuse
அனைத்து கட்சியயும் கூட்டி பந்த் நடத்தவும்
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
24 ஜன,2025 - 17:56 Report Abuse
சரி ... கனிமவள முறைகேட்டு கும்பலை டீம்கா நம்புது ன்னே வெச்சுக்குவோம் .... அதே போல போதைக்கடத்தல் கும்பலுடன் தொடர்பு ன்னு உருட்டுனீங்க .... சாதிக்குடன் சின்ன தத்தி, பெரிய தத்தி போட்டோவெல்லாம் வெளியிட்டீங்க .... இவையெல்லாம் உண்மையா இருந்தா உங்க ஒன்றியம் என்ன பண்ணுது ஐபிஎஸ் சார் ???? உங்க கிட்டே அமலாக்கம் இருக்குது .... வவ துறை இருக்குது ... சிபிஐ இருக்குது ..... டங்ஸ்டன் ரத்தாவும் என்கிற தகவல் சம்பந்தப்பட்ட மந்திரி சொல்றதுக்கு முன்னாடி நீங்களே சொல்றீங்க .... உங்களுக்கு இன்ப்ளூயன்ஸ் இருக்குறது நல்லா தெரியுது .... அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கச்சொல்லலாமே ???? அவனும் என்னை முடிஞ்சா தொட்டு பாரு ன்னுதானே கூப்புடுறான் ....
0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement