முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

விக்கிரவாண்டி; விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஒன்றிய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திர போஸ், நாராயணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் டேவிட் குணசீலன் வரவேற்றார். தணிக்கையாளர் பிரபு தீர்மானங்களை படித்தார்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு ஒன்றியத்தின் சார்பில் அளிப்பது எனவும் , 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் முருகன், குமரன், செந்தில் வடிவு, ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், சத்யா, பாரதி, ராஜேஸ்வரி, முனுசாமி, சாவித்திரி, ரவிச்சந்திரன், ஏகாம்பரம், செல்வம், நளினி, ராஜாம்பாள், அன்பரசி, செந்தில்குமார் ,மகேஸ்வரி, இளவரசி ,சாந்தி, செண்பகசெல்வி , கஸ்துாரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உதவியாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

Advertisement