'ஆன்லைன்' சூதாட்ட பிரச்னை அரசு மீது ராமதாஸ் புகார்

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

நாகர்கோவிலில் தீயணைப்பு வீரர் கருப்பசாமி, ஆன்லைன் ரம்மியில், 17 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை செய்துள்ளார்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்றவைகளுக்கு பொருந்தாது என, 2023 நவம்பர் 10ல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், இதுவரை, 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான். தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைவுபடுத்தி, தடை பெற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement