தொழிலாளர் காப்பிட்டுக்கழகத்தில் 27ம் தேதி குறை தீர்ப்பு கூட்டம்

புதுச்சேரி : தொழிலாளர் அரசு காப்பிட்டுக் கழக இ.எஸ்.ஐ., தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு, குறை தீர்ப்பு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

புதுச்சேரி மண்டல அலுவலக செய்திக்குறிப்பு:

இந்த குறை தீர்ப்பு கூட்டம், வில்லியனுார் - சேதராப்பட்டு மெயின் ரோடு, தொண்டாமநத்தம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் இன்ட ஸ்ட்ரீஸ், காரைக்கால், காமராஜர் சாலை, இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில், நாளை மறுநாள் 27ம், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

தொழிலாளிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு, இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்., தொடர்பான கோரிக்கைகளை முகாமில் தெரி விக்கலாம். தொழிலாளர்களின் மனுக்கள், உடனடியாக பரிசீலிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement