'ஆயுட்காலம் குறைய மன அழுத்தம் காரணம்'

புதுச்சேரி : 'மனிதர்களின் ஆயுட்காலம் குறைய மன அழுத்தமே காரணம்' என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச உளவியல் மாநாட்டில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

பரபரப்பான உலகில் நாம் இயங்கி வருகிறோம். நமது முன்னோர்கள் சராசரியாக 120 ஆண்டுகள் வாழ்ந்தனர். தற்போது ஆயுட்காலம் படிப்படியாக குறைந்து 60 ஆண்டாகி விட்டதற்கு, மன அழுத்தமே காரணம்.

முன்னோர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நீண்ட காலம் வாழ்ந்தனர். தற்போது 45 வயதில் இதய நோய்கள் வருகிறது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் பிட் இந்தியா திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

சித்தர்கள் அருளிய யோகாவை உலகம் முழுதும் கொண்டு சென்றார். சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதற்காக தான் யோகா, உடல் பயிற்சியை வலியுறுத்தி வருகிறார். நம் நாடு வல்லரசாக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' என்றார்.

Advertisement