அதிக மகசூல் பெற மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி

செய்யூர், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பங்கனபள்ளி, ஒட்டு, ருமானி, செந்துாரா உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன.

கோடைகாலங்களில் மாம்பழம் சீசன் இங்கு களை கட்டுவது வழக்கம், இங்கு விளையும் மாம்பழங்கள் இங்கேயே நேரடியாக விற்பனை செய்யப் படுகிறது.

தற்போது பனிப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் மாமரத்தின் பூக்கள் கருகி பெருமளவில் சேதமடைகிறது. மேலும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மாமரங்கள் தற்போது பூ பூத்து, பிஞ்சு வைக்கும் நிலையில் உள்ளது, பெரும்பாலான பூச்சிகள் இந்த நிலையிலேயே மா மரங்களை தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூச்சி தாக்குதலில் இருந்து தடுக்கவும், அதிக அளவில் பூக்கள் வைக்கவும், பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement