காட்டுப்பன்றிகள் மீட்பு

கன்னிவாடி : மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோமலிங்கபுரம் அருகே சக்திவேல் விவசாய தோட்டத்தில் 80 அடி ஆழ கிணறு உள்ளது.

இதில் காட்டுப் பன்றிகள் சில தவறி விழுந்தன. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் சென்ற வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 காட்டுப் பன்றிகளை உயிருடன் மீட்டனர். அவை கன்னிவாடி வனப்பகுதியில் விடப்பட்டன.

Advertisement