திருமாவளவனுக்கு தி.மு.க., தலைமை பதில் சொல்லும்: துரைமுருகன்

17


சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன் கேள்விக்கு, தலைமை கழகம் பதில் சொல்லும் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.


காஞ்சிபுரத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'வேங்கைவயல் விவகாரத்தில் போலீசார் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என திருமாவளவன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, 'தலைமை கழகம் பதில் சொல்லும்' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'ஈ.வெ.ரா பற்றி பேசிய சீமானை கைது செய்யாமல் இருக்கிறார்கள். இதில் தி.மு.க.,வின் நாடகம் வெளிப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, 'செல்லூர் ராஜூக்கு இவ்வளவு விஷயம் தெரிகிறதா? பரவாயில்லையே? என்று சிரித்தபடியே துரைமுருகன் பதில் அளித்தார்.

Advertisement