பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் : மரக்காணம் தாலுகா அனிச்சங்குப்பம், நம்பிக்கைநல்லுார் ஊத்துக்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியன். இவர் வீட்டின் மீது கடந்த டிசம்பர் 18ம் தேதி முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பாரதி (எ) டேனியல்,22; என்பவரை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., சரவணன் பரிந்துரையை ஏற்று, பாரதி (எ) டேனியலை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.

Advertisement