தினமலர் செய்தி கொள்முதல் துவக்கம்

மேலுார் கொங்கம்பட்டியில் அறுவடை செய்து நெல்லை கொள்முதல் செய்யும் இடத்தில் சேமித்து வைத்து பல நாட்களாகியும் கொள்முதல் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். குவித்து வைத்திருந்த நெல் வெயில், மழையில் நனைந்து பாழாகியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று கொங்கம்பட்டியில் நெல் கொள்முதல் துவங்கியது. இதையடுத்து மண்டல மேலாளர் முருகேசன், தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி கூறினர்.

Advertisement