திருப்புத்துாருக்கு 'ரிங் ரோடு' புறவழிச்சாலை விஸ்தரிப்பு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

திருப்புத்துார் : திருப்புத்துார் நகரைச் சுற்றி புறவழிச்சாலையை விஸ்தரிக்கும் பணிக்கான திட்டமிடலுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

அண்மையில் சிவகங்கை மாவட்டம் வந்த முதல்வர் திருப்புத்துாரில் கூடுதல் புறவழிச்சாலை திட்டத்தை அறிவித்துஉள்ளார். அதற்கான திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

திருப்புத்துார் நகருக்கு வெளியே தற்போது திருமயம்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைக்கான புறவழிச்சாலை உள்ளது.

புதுக்கோட்டை ரோட்டில் என்.புதுார் துவங்கி, தம்பிபட்டி, தென்மாப்பட்டு, காட்டாம்பூர் வரை இந்த புறவழிச்சாலை செல்கிறது. புதுக்கோட்டை, காரைக்குடி, கண்டரமாணிக்கம், சிவகங்கை ரோடுகளை இணைக்கிறது.

இந்த சாலைக்கு அருகில் காட்டாம்பூர் பகுதியிலிருந்து தேவரம்பூர் வழியாக மதுரை ரோட்டில் கோட்டையிருப்பிற்கு நெடுஞ்சாலைத்துறை புறவழிச்சாலை செல்கிறது. இந்த ரோடுகளுடன் சிங்கம்புணரி ரோட்டையும், பொன்னமராவதி ரோட்டையும் இணைத்து புதுக்கோட்டை ரோட்டிலுள்ள புறவழிச்சாலையுடன் இணைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கியுள்ளனர்.

Advertisement