ஜோதிர்லிங்க தரிசன ஆன்மிக திருவிழா

நத்தம் : - நத்தம் அருகே மேட்டுக்கடையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசனம், அஷ்ட லட்சுமிகளின் தரிசன ஆன்மிகத் திருவிழா நடந்து வருகிறது.

ஜன.26 வரை நடக்கும் 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசனம், அஷ்ட லட்சுமிகளின் தரிசன நிகழ்வை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

12 மாநில ஜோதிர் லிங்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தரிசன நிகழ்ச்சியை யொட்டி 9 சிறுமிகள் அஷ்டலட்சுமிகளின் அலங்காரத்தில் காட்சியளித்தனர். 12 ஜோதிர் லிங்கங்களின் ஆன்மிக் கண்காட்சி தினமும் காலை 7 :00 மணி முதல் இரவு 7 :00மணி வரை நடக்கிறது.

Advertisement